களுத்துறை கடுகுறுன்த பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றிட்கு அருகாமையில் உள்ள, கடற்பரப்பில் நீராட சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
ஹொரன பிரதேசத்தினை சேர்ந்த, முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே நேற்று மாலை நேரம் குறித்த அனர்தத்தில் சிக்கியுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.
இதேவேளை, அவிசாவளை சீதாவாக்கப்புர நதியில், தல்துவ பாலத்தின் அருகாமையில் நீராடிக் கொண்டிருந்த ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
57 வயதுடைய நுகேவத்த பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்தது.