மேஷம் -:இன்றையதினம் எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்-: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.
மிதுனம்-:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
கடகம் -:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை நிறுத்துங்கள். கணவன்- மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவரை வீட்டிற்குள் அழைத்து வர வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடிவிற்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
சிம்மம் – : எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
கன்னி – :தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்துப் பேசுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
துலாம் -:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வாகன வசதிப்பெருகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.
விருச்சிகம் -:சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
தனுசு – :சந்திராஷ்டமம் தொடர்வதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்
மகரம் -:உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.
கும்பம் -:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகள் செய்து பெருமையடைவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.
மீனம்-:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள்