புத்தாண்டு பிறந்தும் வடக்கின் தமிழ் மக்கள் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்ந்து வருவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இம்முறை புத்தாண்டு தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்திருந்தார்.
சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீண்டும் மக்களுக்கு வழங்கப்படாமை , குறித்த பகுதிகளில் இராணுவத்தினர் பயிற்செய்கையில் ஈடுபடுதல் உள்ளிட்ட சில காரணங்களால் வடக்கின் மக்களுக்கு இன்னும் இனிய புத்தாண்டு பிறக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.