இலங்கையில் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் ஜனநாயகம் தொடர்பான செயலகப் பணியகத்தின் செயலாளர் டொம் மாலினொஸ்கி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்
மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்கா 2015ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியிட்டப்பின்னர் செயலாளர் டொம் மாலினொஸ்கி தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதன்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையும் இலங்கையும் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றிக்கொண்ட யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா உதவும் என்று டொம் மாலினொஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டில் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்காவின் அறிக்கையில் இலங்கையில் இன்னமும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுவருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.