மாதம்பே ஊரலிய பிரதேசத்தில் வீடு ஒன்றின் மீது நேற்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட வீட்டில் எந்த நபருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.
பண்டிகை தின கொண்டாடத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.