யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறை அத்தியட்சகருக்கு மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடமை நேரங்களில் அரச அதிபரின் அலுவலகத்திற்கு அளிக்கும் நிரந்தரமாக காவல்துறை பாதுகாப்பை போன்றே யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கும்இ வழங்குமாறு கோரியே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடமை நேரங்களில் திடீரென ஏற்படும் அசம்பாவிதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது அரச அதிபரின் அலுவலகம் மற்றும் செயலகம் என்பனவற்றினை முன் அறிவித்தலின்றி மூடவேண்டியுள்ளது.
அவ்வாறான இடையூறுகள் ஏற்படுவதாகத் தெரிவித்தே இந்த கோரிக்கையினை காவல்துறையினரிடம் விடுப்பதாக அரச அதிபர் குறித்த கடித்த்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காணி அபகரிப்பைத் தடுக்க வேண்டும் என கடந்த திங்கட்கிழமை ஆர்ப்பாட்டக்கார்ர்கள் சிலர் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மனு ஒன்றினைக் கையளித்தனர்.
அரசாங்க அதிபர் இதற்குரிய பதிலை உடனடியாகப் பெற்றுத்தர வேண்டும் என கோரி அரசாங்க அதிபரின் அலுவலகத்தை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.