நாரமிமல பிரதேசத்தினை சேர்ந்த இரண்டு பெண்கள்;சிலாப கடற்பரப்பில் நீராடச் சென்ற போது அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இதன் போது 26 வயது மற்றும் 14 வயதுடைய ஒரே குடும்பத்தினை சேர்ந்த இரண்டு சகோதரிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தினை சேர்ந்த மீனவர்களினால் இரண்டு பேரினது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களின் சடலம் சிலபாம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளது.
சிலாப காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.