அளுத்கமை வெலிப்பென்ன பள்ளிகொட தோட்டத்தில் நேற்று எரியுண்ட லயன் குடியிருப்புக்கு பதிலாக புதிய வீடுகளை அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், இன்று குறித்த தோட்டத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து இதற்கான உறுதிமொழியை வழங்கினார்.
பாதிக்கப்பட்ட 10 வீடுகளின் குடியிருப்பாளர்களுக்காக புதிய வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் இந்த மாத இறுதியில் நாட்டப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தற்காலிக கூடாரங்களை அமைத்துக்கொடுக்கவும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார் என்று அவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.