வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலய புதுவருட சிறப்பு ஆராதனை இன்று மாலை 6.30 மணியளவில் வைத்தியநாத குருக்களின் தலைமையில் ஆரம்பமானது.
புதுவருட சிறப்பு ஆராதனையை தொடர்ந்து சித்தி விநாயகப்பெருமான் அடியார்களுக்கு காட்சி கொடுத்தருளுமுகமாக சிறப்பான முறையில் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலாவை தொடர்ந்து பூசை நிறைவு பெற்றது..
பிறக்கின்ற இப்புத்தாண்டில் சகல சௌபாக்கியங்களையும் எம்பெருமான் விநாயக பெருமானின் திருவருளையும் பெற்றனர்.