சிறைவாசம் அனுபவித்துவரும் கைதிகளுக்கு வீட்டிலிருந்து உணவுப்பெற்று கொடுப்பதற்கான திட்டங்கள் தயாராகவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டங்கள் இன்று மற்றும் நாளை முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.
நாளைய தினத்தில் நாடு பூராகம் உள்ள சிறைக்கைதிகளுக்கு காலை நேர உணவாக பாற்சோறு வழங்கப்படவுள்ளதுடன், மதிய நேர உணவிற்கு விசேட உணவுவகைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.