அவிசாவளை புவக்பிடிய ரண்வல பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றும் அதற்கு எதிர் திசையில் வந்துள்ள சிற்றூந்து ஒன்றும் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது படு காயமடைந்துள்ள சிற்றூந்தின் சாரதி அவிசாவளை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.