கடந்த கால ஆட்சியாளர்களால் தமிழ்மக்களின் கல்வி கலை கலாசாரம் என்பன திட்டமிட்டமுறையில் அழிக்கப்பட்டு இருக்கின்றது அதனை மீட்டெடுப்பதற்கு அனைவரும் முன்நின்று உழகை;கவேண்டு என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்
பெரிய நீலாவணை கிராமியபொருளாதார அபிவிருத்தி ஒன்றியம் நியூஸ்ரார்விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் முயற்சியாளர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பெரியநீலாவணை சரஸ்வதிவித்தியாலய மண்டபத்தில் 9 ஆம்திகதி மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு போசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாணவமீட்புப் பேரவையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.கணேஸ். கல்முனை தமிழ்ப்பிரிவுபிரதேசசெயலாளர் கே.லவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அவர் அங்க தொடர்ந்து உரையாற்றுகையில் கடந்தகால யுத்தத்தின் போது பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகவே தமிழ்ச் சமூகம் இருக்கின்றது.
இந்நிலையில் நாட்டின் அரசாங்கம் மாற்றம்பெற்று நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறியிருக்கும் நிலையில் இச்சந்தப்பத்தில் அவ் அரசாங்கத்திடம் தேவைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும்