தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோரின் சட்டங்கள் வெளிப்படையாக மீறப்பட்டுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய வியாபாரிகள் சங்கம்தெரிவித்துள்ளது.
இதனால் நுகர்வோர் பெருமளவில் பாதிக்கபட்டுள்ளதாக அந்தச் சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு நுகர்வோர் சட்டங்கள் மீறப்பட்டுள்ளமையானது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரின் தவறு என இந்த சங்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற உற்சவ நாட்களில் நுகர்வோரை தெளிவுபடுத்தும் நோக்கில்ஊடகங்கள் ஊடாக அறிவித்தல் விடுக்குமாறு நுகர்வோர் அதிகார சபையிடம் தாம் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அமைச்சர் ரிசாட் பதியூதீன் தன்னுடைய அனுமதி இல்லாமல் ஊடகங்களுக்கு எந்தவொரு விடயத்தையும் வழங்க வேண்டாம் என நுகர்வோர் சங்கத்திடம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நுகர்வோரை தெளிவுப்படுத்தும் இந்த செயல்பாடானது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நுகர்வோர் பாதுகாப்பு தேசிய வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.