புதையல் தோண்டிய 6 பேரை வனத்துவில்லு காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பதவிய – ஸ்ரீபுர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய உபகரணங்களையும் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.