யாழ்ப்பாணம் – சவகச்சேரி பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வெளிநாட்டில் உள்ள இரண்டு இலங்கையரை கைது செய்ய காவற்துறையினர் முற்பட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபரொருவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு அமைவாக அவர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த நபர் வெளிநாடு சென்றுள்ள குறித்த இரண்டு பேரிடமே அதிகமாக தொலைபேசியில் உரையாடியுள்ளமை தொலைபேசி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.