கீரிமலை நகுலேஸ்வரம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சொந்தமான ஒரு தொகுதி காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 6.47 ஏக்கர் காணி நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, செம்மன் பொன் இந்து மயானம், வேணுகா மடம், கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான பாதை ஆகியன விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த செம்மன் மயானத்திற்காக பொது மக்களால் கடந்த காலத்தில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
1990 ஆம் ஆண்டு கடற்படையினரின் தேவைக்காக கையகப்படுத்தப்பட்ட இந்த காணி சுமார் 26 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.