தொடங்கொட கினகஸ்மானா ருவன்கம பிரதேசத்தில் மகள், தனது 50 வயதான தந்தையை தடியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் நேற்று (12) இரவு வீட்டுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மீது எசிட் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
26 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப பிரச்சினை காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக கருதப்படுவதுடன், குறித்த பெண் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.