மின்சாரம் தாக்கியதில் மீன் வியாபாரியின் உதவியாளர் ஒருவர் கினிகத்தேனை மரணமானதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
கினிகத்தேனை பிரதானபஸ் தரிப்பிடத்திற்கருகில் பழைய சந்தையில் மீன் விற்னையில் ஈடுபட்டிருந்த 34 வதுடைய நுவான் சத்துரங்க என்பரே இவ்வாறு மரணமானார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் குறித்த இடத்தில் வழமையாக லொறியொன்றில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் சட்ட விரோதமான முறையில் மின் இணைப்பை பெற்று இரவு நேரங்களில் வியாரத்தில் ஈடுபட்டுளார்,
இந் நிலையில் 11.04.2016 இரவு 9 மணியளவில் வியாபாரத்தை நிறைவு செய்துகொண்டு வழமை போன்று சட்டவிரோதமாக பெறப்பட்ட மின் இணைப்பு வயரை மீன் விற்பனை உதவியாளர் அகற்ற முட்பட்ட போதே மின் தாக்குதலுக்கு இழக்காகியுளார்.
உடனடியாக நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி மரணமானதாக கினிக்த்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த லொறியையும் மீன் வியாபாரியையும் பொலிஸார் தடுத்து வைக்கப்பட்டு மரணம் தொடர்பில் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

