இந்தியாவின் முன்னணி பெண் ‘பைக் வீராங்கனை’ வேணு பாலிவால் வீதி விபத்தில் பலியாகியுள்ளார்.
மத்திய பிரசேத மாநிலம் விதிஸா மாவட்டத்தில் உள்ள கையாராஸ்பூரில் உள்ள சாலையில் வேணு பாலிவால் தனது ‘ஹார்லி டேவிட்சன்’ பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பைக் , சாலையில் கவிழ்ந்து விழுந்தது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த வேணு, அருகே உள்ள கையாராஸ்பூர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் மேல்சிகிக்சைக்காக விதிஸா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்தியாவின் முன்னனி மோட்டார் சைக்கிள் பந்தய வீராங்கனையான வேணு ஜெய்பூரைச் சேர்ந்தவர், தனது ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளில் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தது.