எதிர்வரும் சில நாட்களுக்கு நீரை குறைவாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை பொது மக்களிடம் கோரியுள்ளது.
அதன் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.
நீர் விநியோகத்தில் பிரச்சினை ஏற்பட்டாள் அது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர் வழங்கல் சபை ஆயத்தமாகவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.