16 வயதான யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 27 வயதான இளைஞனை கொஸ்வத்த காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த யுவதி விடுதியொன்றில் வைத்து இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
தான் காதலனுடன் விடுதியொன்றுக்கு சென்றதாகவும் பின்னர் தனக்கு தூக்கம் வந்ததாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
பின்னர் கண்விழித்த போது தான் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை தெரியவந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனைக்காக அந்த பெண், மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர், மாரவில மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
எனினும் காவற்துறையினர் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.