உட்கட்சி மோதல்கள் குறித்து கருத்து வெளியிடாமல் இருப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்சின் தலைவர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார்.
கட்சிக்குள் மேலும் பிளவுகள் ஏற்படாமல் இருப்பதைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்மாந்துறை தள வைத்தியசாலையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையில் மௌனம் காப்பதே கட்சியை வழிநடத்துவதற்கான சிறந்த வழியென ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
உட்கட்சி மோதல்கள் குறித்து வெளிப்படையாகவும் ஊடகங்களுக்கும் கருத்து வெளியிட விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார்.
கட்சியின் முக்கிய கொள்கை விடயங்களில் கொண்டுள்ள நிலைப்பாடு குறித்து விமர்சித்து ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்து கருத்து வெளியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
எனவே ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்சின் ஏனைய தலைவர்களுடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட தாம் விரும்பவில்லை எனவும் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.