வந்துரம்ப பிடிஹராவ பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கொலை செய்யப்பட்டுள்ள 17 வயதான யுவதியின் மரணம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
நேற்று மாலை இந்த சோதனை நடவடிக்கைகளுக்காக காவற்துறை நாயின் உதவி பெற்று கொள்ளப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டுள்ள யுவதியுடன் காதலில் ஈடுபட்டுள்ள இளைஞனின் வீட்டை காவற்துறை நாய் கண்டுபிடித்துள்ளது.
எனினும் இதன்போது குறித்த நபர் தப்பி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இதேவேளை சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி காவற்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
வந்துரம்ப பிடிஹராவ பிரதேசத்தில் யுவதியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கடுமையான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. 17 வயதுடைய குறித்த சிறுமியின் காதலன் என கூறப்படும் நபரால் இந்த குற்றச்செயல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் குறித்த பகுதியில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலை தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் , வந்துரம்ப காவற்துறையினர் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.