பொருட்களின் விலைகள் வானளவு உயர்வடைந்துள்ளன இந்த நிலையில் மக்கள் எவ்வாறுபுத்தாண்டு கொண்டாடுவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்விஎழுப்பியுள்ளர்.
அண்மையில் தங்காலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
மக்களின் வாழ்க்கைச் செலவு பாரியளவில் அதிகரித்துள்ளது.
எனது அரசாங்க ஆட்சிக் காலத்தில் பரீட்சை பெறுபேறுகள் பெற்ற 10 மாணவ மாணவியரில்8 பேர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அதுவே உண்மை. இன்று கல்வி குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டுள்ளது.
பொருளாதாரம் முற்று முழுதாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின் அபிவிருத்திநடவடிக்கைகள் செயலிழந்துள்ளன.
குரோம், பழிவாங்குதல்களை விட்டு அனைவர் மீதும் அன்பு காட்டுமாறு நல்லாட்சிஅரசாங்கத்திடம் கோருகின்றோம்.
அம்பாந்தோட்டை நகர் இன்று இருளடைந்துள்ளது அனைத்து அவிருத்தி நடவடிக்கைகளும் ஸ்தம்பிதடைந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.