சட்ட விரோதமாக மான் குட்டி ஒன்றை கொன்று அதன் இறைச்சியை விற்க முனைந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் விசேட காவல்துறை பிரவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம், கம்பிரிகஸ்வௌ பிரதேசத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தனர்.
கஞ்சா செய்கை குறித்து கிடைத்த தகவலுக்கு அமைய அந்த பிரதேசத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்ததுடன், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கிராம் மான் இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.