இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரான, டெலிகொம் மொபிடெல் தலைவர் குமார்சிங்க சிறிசேன அரசாங்கத்தின் கேள்விப்பத்திர நடைமுறையை மீறி செயற்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதன் காரணமாக மொபிடெல் நிறுவனத்திற்கு 20 மில்லியன் டொலர் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி மாதம் 08ம் திகதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்களினால் கொடுக்கப்பட்ட வெற்றியினை டெலிகொம் மொபிடெல் நிறுவனத்துக்கு தலைவராக நியமிக்க கொடுக்கப்பட்ட மக்கள் ஆதரவென தவறாக குமாரசிங்க சிறிசேன புரிந்து கொண்டுள்ளதாக அந்த ஊடகம் குற்றம் சாட்டியுள்ளது.
அவர் தன்னிச்சையான அரசாங்கத்தின் கேள்விப்பத்திர நடைமுறையை மீறி தான் தலைவராக செயற்படும் அரை அரச நிறுவனமான மொபிடெல் நிறுவனத்தின் காப்புறுதி கேள்விப்பத்திரத்தையே மீறி செயற்பட்டுள்ளார்.
மொபிடெல் நிறுவனத்தின் காப்புறுதி தொடர்பில் பகிரங்கமாக கேள்விப்பத்திரத்திற்கு அழைத்துள்ள நிலையில், இரண்டு கேள்விப்பத்திர வாரியம் மூலம் மற்றும் மதிப்பிடும் குழுவின் மதிப்பீட்டின் பின்னர் பணிப்பாளர் சபை தீர்மானித்ததன் பின்னர் அதற்கு உரியவருக்கு அதனை வழங்காமல் சிறிசேனவின் தீர்மானத்தின்படி வேறு கேள்விப்பத்திரத்திற்கு மொபிடெல் காப்புறுதியை தீர்மானித்துள்ளார்.
இரண்டு கேள்விப்பத்திர வாரியம் மூலம் மற்றும் மதிப்பிடும் குழுவின் மதிப்பீட்டின் பின்னர் பணிப்பாளர் சபை குறைந்த கேள்விப்பத்திரத்தை தீர்மானித்திருந்த போதிலும் குமாரசிங்க சிறிசேன தனது விருப்பத்தின் படி வழங்கப்பட்ட கேள்விப்பத்திரம் 20 மில்லியன் டொலருக்கும் அதிகமான கேள்விப்பத்திரத்திரமாகும். இது ஒரு சிறிய விடயம் அல்ல 20 மில்லியன் டொலர் எனப்படும் 300 கோடியாகும்.
மொபிடெல் காப்புறுதிக்க குறைந்த கேள்விப்பத்திரத்தை யூனியன் இன்சுரன்ஸ் நிறுவனம் சமர்ப்பித்திருந்தது. இது 140 அமெரிக்க டொலர் மில்லியனாகும்.
யூனியன் இன்சுரன்ஸ் நிறுவனம் சமர்ப்பித்திருந்த கேள்விப்பத்திரத்தையே இரண்டு கேள்விப்பத்திர வாரியம் மூலம் மற்றும் மதிப்பிடும் குழுவின் மதிப்பீட்டின் பின்னர் பணிப்பாளர் சபை அனுமதித்திருந்தது.
எனினும் குமாரசிங்க சிறிசேனவினால் குறித்த கேள்விப்பத்திரத்தை யூனியன் காப்புறுதி நிறுவனத்திற்கு வழங்காமல் அதனை விட 20 மில்லியன் டொலர் அதிகமாக சமர்ப்பித்திருந்த ஸ்ரீலங்கன் இன்சுரன்ஸிற்கே வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் இன்சுரன்ஸ் முழுமையான அரசாங்க நிறுவனம் அல்ல அது அரை அரசாங்க நிறுவனமாகும்.
எப்படியிருப்பினும் அரசாங்க நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனமும் போட்டியிட்டு கேள்விப்பத்திரம் சமர்ப்பிக்கும் போது அரசாங்க கேள்விப்பத்திரத்தை மீறி செயற்படுவதற்கு ஒருவருக்கும் அனுமதியில்லை.
இதன்போது குமாரசிங்க சிறிசேன என்பவரினால் அரை அரசாங்க நிறுவனமாக ஸ்ரீலங்கா இன்சுரன்ஸ் நிறுவனத்துடன் நட்புறவுடன் செயற்பட்டுள்ளமையினால் தன் தலைவராக செயற்படுகின்ற அரை அரசாங்க நிறுவனமாக மொபிடெல் நிறுவனத்திற்கு 300 கோடி நட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.
அரை அரசாங்க நிறுவனத்தின் தலைவர் ஒருவரின் விருப்பத்திற்கமைய செயற்பட முடியும் என்றால் இரண்டு கேள்விப்பத்திர வாரியம் மூலம் மற்றும் மதிப்பிடும் குழுவின் மதிப்பீட்டின் பின்னர் பணிப்பாளர் சபையின் அனுமதி அவசியமற்றது. நேரடியாக தலைவரின் அனுமதிக்கமைய கேள்விபத்திரம் ஒன்றை தீர்மானிக்க முடியும்.
எப்படியிருப்பினும் தனது சகோதரர் நிறைவேற்று அதிகாரம் கொண்டுள்ள ஜனாதிபதியாக மக்களினால் நியமிக்கப்பட்டுள்ளமையை தவறாக புரிந்து கொண்டே குமாரசிங்க சிறிசேன என்பவரினால் தொடர்ந்து இவ்வாறு ஊழலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.