இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான குஷல் ஜனித் பெரேராவுக்கு சர்வதேச கிரிக்கெட் சபை நான்கு ஆண்டுகள் போட்டி தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துப் பாவனை தொடர்பான குற்றச்சாட்டிலேயே இந்த போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று இலங்கை கிரிக்கெட் சபைக்கு விடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த தடையினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.