வலஸ்முல்லை கதசுரிந்துகம பிரதேசத்தில் 21 வயதுடைய யுவதி ஒருவரை பலாத்காரமான முறையில் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த யுவதி அவரின் பாட்டியின் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் இந்த குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.
இரவு ஏழு மணியளவில் மின்சாரத்தடை ஏற்பட்ட போது வீட்டிற்கு வந்து குறித்த யுவதியின் சித்தப்பா அவரை அறையொன்றிற்கு பலாத்காரமான முறையில் அழைத்துச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
அதன் பின் சம்பவம் தொடர்பில் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலஸ்முல்லை காவற்துறையினர் இது தொடர்பாக மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.