சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம் செலுத்தினால் அவர்களின் சாரதி அனுமதி பத்திரத்தை மீள வழங்குவதில்லை என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த செயற்திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த பிரதி காவற்துறை மா அதிபர் அமரசிறி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.