தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை தமிழர்கள் மத்தியில் வெவ்வேறு நிலைப்பாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில் தமிழ் நாட்டுக்கு அகதிகளாக சென்ற ஈழ மக்கள் தற்போது, சுயவிருப்பத்தின்பேரில் ஐக்கிய நாடுகளின் அகதிகள் பேரவையின் உதவியுடன் நாடு திரும்பிவருகின்றனர்.
இவ்வாறு நாடு திரும்புகின்றவர்களில் ஒருசாரார் அதிக எதிர்பார்ப்புடனும், மகிழ்ச்சியுடன் நாடு திரும்புகின்ற போதும், மற்றுமொரு சாரார் அச்சத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பலர் தங்களின் வாழ்வாதாரம் குறித்து அச்சம் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.