தெமடகொடை – காலிபுல்லை தோட்டம் பிரதேசத்தில் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவெடிகுண்டுகள் இரண்டை வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 21 வயதுடையவர்களாவர்.
இவர்கள் தெமடகொடை மற்றும் மாலிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர் .
சந்தேக நபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.