மன்னார் தாழ்வுபாடு கிராமத்தில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்து கைக்குண்டு ஒன்றை இன்று மாலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தாழ்வுபாட்டு கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதான பிரதான வீதியில் உள்ள தனியார் ஒருவரின் காணியில் இருந்தே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காணியின் உரிமையாளர் குறித்த காணியினை துப்பரவு செய்து கொண்டிருந்த போது குறித்த காணியின் சுற்று வேலிக்கு அருகாமையில் இருந்து குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
உடனடியாக கிராம அலுவலகர் ஊடாக மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், மன்னார் பொலிஸார் மற்றும் அப்பகுதி இராணுவத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குறித்த கைக்குண்டை மீட்டுள்ளனர்.
குறித்த கைக்குண்டு புதிதாக காணப்படுவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிக்குச் சென்ற மன்னார் பொலிஸார் குறித்த காணி உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, மீட்கப்பட்ட கைக்குண்டை செயழிழக்கச் செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.