மட்டக்களப்பு நாவற்குடா கடற்கரை வீதியினை சேர்ந்த பத்மநாதன் –பத்மமயூரன் (வயது -26) என்னும் வாலிபர் தொழில் நிமிர்த்தம் யாழ்ப்பாணம் சென்ற வேளை கடந்த மூன்று வருடங்களாகியும் குடும்பத்தாருடன் எதுவிதமான தொடர்புகளும் இன்றி இருப்பதனால் அவரது தாயார் தேடி வருகின்றார்.
தந்தையை இழந்து தாயாரின் கவனிப்பில் இருந்த வேளையில் தொழில் நிமிர்த்தம் யாழ்ப்பாணம் செல்வதாக கூறிச் சென்றுள்ளார்.
எனினும், குறித்த வாலிபர் தொடர்பாக இதுவரையும் எதுவித தகவலும் இல்லாமையினால் பல இடங்களிலும் முறையிட்டும் கண்டுபிடிக்க முடியாமல் தான் இருப்பதாக கண்ணீர் மல்க அந்த வயோதிப தாயார் திருமதி பத்மநாதன் புனிதவதி தெரிவித்துள்ளார்.
இவரைப்பற்றிய தகவல் தெரிந்தோர் 0775453549 –(0655682293) என்னும் தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு வேண்டி நிற்கின்றார்.
வாலிபரை படையினர் கைது செய்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.