பொலன்னறுவை தேசிய பூங்காவிற்கு அருகில் அனுமதியின்றி நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட 48 பேருக்கு எதிராக வனவிலங்கு திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கும் அதிகமான பகுதிகளில் இவர்கள் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக தேசிய பூங்காவின் சுற்றுச்சூழல் அமைப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.