குருநாகலை – கல்கமுவ – வேகெதர பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் இன்று காலை இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேகெதர பிரதேசத்தில் அரிசி ஆலையொன்றில் பணிபுரிந்துவந்த 20 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த அரிசி ஆலையை சுத்தப்படுத்தும் போது பாதுகாப்பற்ற மின்சார இணைப்பில் சிக்குண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.