மேல்மாகாண மருத்துவமனைகளில் 1000 தொழில் வெற்றிடங்கள் காணப்படுவதாக சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவத்துறை மாகாண சபை அமைச்சர் சுமித்லால் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த வெற்றிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சேவையாளர்களை இணைத்துக்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர் வரும் வாரத்தினுள் அது தொடர்பான விண்ணப்பங்கள் வௌியிடப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
குடும்ப நல உத்தியோகத்தர்கள் 421 பேருக்கான வெற்றிடம் நிலவுகின்றது.
அதேபோல் , தாதியர் மற்றும் தொழிலாளர்கள் தரங்களில் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.