மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை தொடர்பில் விலைப் பொறிமுறைமை ஒன்றைஅறிமுகம் செய்யுமாறு சர்வதேச நாணய நிதியம், அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல்வழங்கியுள்ளது.
மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை நிர்ணயத்தின் போது அவற்றின்உற்பத்திச் செலவுகளை ஈடு செய்யும் வகையில் விலைப் பொறிமுறைமை உருவாக்கப்படவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 150 கோடி அமெரிக்க டொலர் கடன் வழங்க உள்ளது.இது தொடர்பில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருந்தது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதிகளுக்கு அமைய சக்திவள விலைநிர்ணயம் தொடர்பில் அரசாங்கம் தலையீடு செய்யாது சந்தையின் கேள்வி நிரம்பல்பற்றிய காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
இதன்படி காலத்திற்கு காலம் உலக சந்தையில் எரிபொருள் விலை ஏற்ற இறக்கத்திற்குஅமைய எரிபொருளின் சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்களுக்கும் கால மாற்றத்திற்கு ஏற்ற வகையில் விலைநிர்ணயிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்காக விலைநிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அந்த நடைமுறை இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.