புகையிரத கடவையின் அருகாமையில் தனிமையில் இருந்து சிறுத்தை குட்டி ஒன்றை ஹெட்டன் பிரதேசத்தினை சேர்ந்த ஒருவரினால் காவற்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை ஹெட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் தனிமையில் இருந்த சிறுத்தை குட்டியை பூனை குட்டி என்று நினைத்து குறித்த நபர் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.
வீட்டிற்கு கொண்டு சென்ற பின்னர் சிறுத்தை குட்டி என அறியவந்துள்ளதுடன் காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சிறுத்தை குட்டியை நலன்தனிய வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக ஹெட்டன் காவற்துறை தெரிவித்துள்ளது.