இலங்கையில் மெட்ரோ தொடரூந்து சேவையை அறிமுகம் செய்வதில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று இணக்கம் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது பல்வேறுபட்ட சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, வர்த்தகம், முதலீடு, ஒத்துழைப்பு, பாதுகாப்பு, கடலோர பாதுகாப்பு என்பன தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த விஜயத்தின் போது Hitachi எனும் உயர் தொழில்நுட்ப சர்வதேச நிறுவனத்தின் தலைவரினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலும், ஹர்ஷ டி சில்வா கலந்துகொண்டுள்ளார்.
இதன்போது இலங்கையில் மெட்ரோ தொடரூந்து சேவையை அறிமுகம் செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இலங்கையின் போக்குவரத்து துறையில் ஐப்பானின் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தல், தொடர்பாடல் மற்றும் அதிகார அமைப்புகள் மற்றும் இலங்கையின் ஒத்துழைப்பை உயர்த்துவது தொடர்பில் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பான் வெளியுறவு அமைச்சின் அழைப்பின் பேரில் கடந்த மாதம் 20ம் திகதி இலங்கை வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.