வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பி வைக்கும் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடும் நாடுகள் பட்டியலில், ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கையையும் சேர்த்துள்ளது.
இதன் காரணமாக இலங்கைக்கு எதிராக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு எதிரான அலுவலகம் ஒன்றை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வெளிநாடுகளுக்கு தொழில்களுக்கு ஆட்களை அனுப்பும் சட்டவிரோத சம்பவங்களால், இலங்கைக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்புகளுக்கு பொறுப்பாக இருந்தவர்கள், நிலைமை உக்கிரமடையும் வரை பார்த்து கொண்டிருந்தமை ஆச்சரியமானது எனவும் அமைச்சர் அத்துகோரள மேலும் தெரிவித்துள்ளார்.