விராட் கோலி – அனுஷ்கா சர்மா இருவரும் காதலை முறித்துக் கொண்டதாக வெளிவந்த செய்திகளுக்கு பிறகு தற்போது இருவரும் மீண்டும் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் கேப்டன் விராட் கோலி. நட்சத்திர வீரரான இவரும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் தீவிரமாக காதலித்து வந்தனர்.
கிரிக்கெட் மைதானத்துக்கு சென்று கோலியை உற்சாகப்படுத்தினார் அனுஷ்கா சர்மா. இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் காதலை முறித்து கொண்டு பிரித்தனர்.
20 ஓவர் உலக கோப்பையில் சிறப்பாக விளையாடிய விராட் கோலியை பாராட்டியும், அனுஷ்கா சர்மாவை கேலி செய்தும் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து வெளியிட்டனர். இதற்கு கோலி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அனுஷ்காவுக்கு ஆதரவாக கருத்தும் வெளியிட்டார். இதையடுத்து இருவரும் தங்களது காதலை மீண்டும் புதுப்பித்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியது.
இதற்கிடையே கோலி– அனுஷ்கா ஜோடி மும்பை பந்த்ராவில் உள்ள ஓட்டலுக்கு ஒன்றாக சென்று சாப்பிட்டனர். பின்னர் இருவரும் வெளியே வந்தபோது ரசிகர்கள் போட்டோ எடுத்தனர்.
இருவரும் தங்களது கார்களில் தனித்தனியாக புறப்பட்டு சென்றனர். இதனால் இருவருக்கும் மீண்டும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக மும்பை வட்டாரங்களில் பேசப்படுகிறது.