இலங்கை வந்துள்ள ஜேர்மன் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்றைய தினம் வட மாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.
குறித்த குழு வலிகாமம் வடக்கு அதி உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் கோணப்புலம் நலன்புரி முகாம் ஆகியவற்றிற்கு விஜயம் செய்தது.
இதன்போது, குறித்த குழு நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களின் நலன்கள், தேவைகள் குறித்து ஆராய்ந்துள்ளது.
தங்களை வெகுவிரைவில் மீள்குடியமர்த்துமாறு நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வட மாகாணத்தில், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகளை ஆய்வு செய்யும் நோக்கிலே இந்த ஜேர்மன் நாடாளுமன்ற குழு வருகை தந்துள்ளமை குறிப்பிடதக்கது.