யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திகளுக்காக வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்பட்ட 15 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனினால் இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு 9 மில்லியன் ரூபாவும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 6 மில்லியன் ரூபாவும் பகிரப்பட்டுள்ளன.
இந்த நிதி யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கல்வி, விளையாட்டு, கடற்றொழில், கலாச்சாரம் மற்றும் சமூக நலன் ஆகியத்துறைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.