ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எபோட்சிலிபகுதியில் ஐவர் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எபோட்சிலி, மாஸ்க் தோட்டத்தை சேர்ந்த ஆண் தொழிலாளர்கள் 09.04.2016 (இன்று) காலை 9.மணியளவில் தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த போது, குளவிகள் கொட்டியுள்ளது.
பாதிப்புக்குள்ளானவர்களில் மூவர் தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், இருவர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.