இலங்கை சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து இரகசிய கலந்துரையாடல் ஒன்றை இன்று ஆரம்பித்தது.
மாத்தளை நகரத்தின் அருகாமையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த இரகசிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.