ஹபராதுவ ஹெடிவத்தை சந்தி பகுதியில், மாத்தறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில், சிறிய பாரவூர்தி ஒன்று மோதுண்டது.
இதில் ஒருவர் பலியானார். பலியானவர் 77 வயதான அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையை கடக்க முற்பட்ட வேளையில் குறித்த பாரவூர்தி தொடருந்துடன் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை மஹநுவர பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும் உந்துருளி மோதிக்கொண்டதில் முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பாறை பரகஹகெலே பிரதேசத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ சிப்பாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.