8 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 16 வயது இளைஞர் ஒருவர், வனாத்தவில்லுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி வீட்டின் அருகாமையில், 16 வயதான சந்தேக நபர் வசித்துவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் தொலைக் காட்சியில் ஒளிப்பரப்படும் கார்ட்டூன் நிகழ்ச்சி பார்பதற்காக, சிறுமி சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று வந்துள்ளதாக அறியவந்துள்ளது.
இதன் போது குறித்த சிறுமியை வெளியே அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கியதாக குறிப்பிடப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுமி தனது பெற்றோரிடம் சம்பவம் தொடர்பில் முறையிட்டமைக்கு அமைவாக, அவர்கள் வனாத்தவில்லுவ பிரதேச காவற்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து, சிறுமி கொடூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளமை அறியவந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
சந்தேக நபரான 16 வயது இளைஞர், கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் புத்தளம் மாவட்ட நீதி மன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.