கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தகவல் தொழிநுட்ப பரீட்சைகளை ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.