சிரியாவின் ஐ.எஸ். தீவிரவாதிகளால் 175 தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு டமஸ்கஸ் பிராந்தியத்தில் உள்ள சீமெந்து தொழிற்சாலை ஒன்றின் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இதன்போது, 300க்கும் அதிகமானவர்கள் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
காணாமல் போனவர்களை தீவிரவாதிகளே கடத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 175 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ தகவல்களை மேற்கோள் காட்டி, சிரியாவின் சானா செய்தி ஊடகம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இதனை இராணுவத்தினரோ அல்லது சிரிய அரசாங்கமோ இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
அதேநேரம், குறித்த 175 பேரும் படுகொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து குழப்பமான தகவல்களும் வெளியாக்கப்பட்டு வருகின்றன.