கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள பெண் ஒருவரின் சடலம் ஹோமாகமையில் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் ஹோமாகம கிரீன் டாடின் – மஹாகட்டுன பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான பெண் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் இருக்கும் பகுதி காவற்துறை பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், இன்று பிரதேபரிசோதனை இடம்பெறவுள்ளதாக காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பாக ஹோமாகம காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.